கடற்கரையில் நாம் அறியாத
பிள்ளைகளாய் பொங்கிவரும்
அலையில் புரண்டும் ..தங்கமாய்
கிடந்த கரை மணலில் தவழ்ந்தும்
அலைகளின் இசைக்கேற்ப ஆடியும்
பாடியும் களைத்து போய் கரையில்
அமர்ந்து விட்டோம் ..
மணலை கையிலெடுத்து உன்னுருவம்
நான் செதுக்க எதையோ பார்த்தபடி
நீ எளிதாய் கேட்டாய் ..
சதீஷ் நமக்கென்று வீடமைத்து ..
எனக்கு நீயும் உனக்கு நானும்
நமக்குள் காதலும்
அதனுடன் நான்கு பிள்ளைகளும்
நலமாக வாழுவோமா என்று..
உன் உருவம் செதுக்க தெரிந்த
எனக்குள்
உருவாகவில்லையடி பெண்ணே
இந்த உணர்வுகள் ..
பத்து வயசிலேயே
பரவச படித்திவிட்டாயே பாவையே ..
நீ வேடிக்கையாய் சொல்கிறாய் என
நான்விளையாட்டாய் எடுத்ததும்
மண்ணை முறைத்தபடி பெண் நீ
பேசாமல் சென்றுவிட்டாய் ..
சிறுபயல் நான் எப்படி அறிந்திருப்பேன்
அன்றேநீ என்னை காதலித்ததை ?
இன்று உன் போல் அதே
நினைவுகளோடு நான் ...
அதே கடற்கரை மணலை
வெறித்த படி கேட்கிறேன் .. இன்றும்
கோவமாக நீ மணலுக்கு பதில் ...என்னை
முறைத்து ..அன்றும் இன்றும்
என்றும் உன்னை மட்டுமே
காதலிப்பவள் நானடா .. உன்
போலல்ல .. கேட்டு பார் இந்த மணல்
சொல்லும் ..என் காதலை உன்னிடத்தில்
என்று கோவமாய் பேசுகிறாய் ..
வெறித்தபடி பார்கிறேன் மணலை.. உன்
காதலை அறிய அல்ல கண்ணே ..இதுவரை
அறியாமல் இழந்து விட்ட ... என் காதலை அறிய
No comments:
Post a Comment