Tuesday, March 29, 2011

!! என் கவிதையின் கரு !!

கவிதை எழுத தான் கருவை
தேடுகிறேன் ...
எவ்வளவோ யோசித்தும் எதுவுமே
கிடைக்கவில்லை ..

சோகமாய் நான் ஜன்னலை
வெறித்து பார்த்தபடி இருந்தேன் .
சாலையில் நீ ... அம்மாவுடன்
பேசும்போதே உன் அழகான விழிகளை
அங்கங்கு உருட்டிக்கொண்டு
அறியாத பிள்ளையாய் நீ செய்த
சேட்டைகள் ....ஏனோ என் கண்ணையும்
பறித்து விட்டது ..


எதிர்பாராது நீ
என்னை பார்த்ததும் .. நீயறியாமலே
படர்ந்த வெக்கம் உன்னை
பேசவிடாமல் செய்ததையும் பார்த்தேன் ..


மலரை கண்ட வண்டுபோல் என் மனது
உன்பால் மயங்க .. ஆர்வ மேலீட்டால்
என்னை அறியாமலே என் கை உன்னை
அழைக்க ..அம்மா பார்த்து விட்டாலும்
என்றெண்ணி நீ பயந்தாயே ..

அந்த நொடி உன் ஓரகண்ணால் ..
என்னை கொல்லும்..ஒரு பார்வை
பார்த்தாய் ... இதை விடவா
ஒரு கரு வேண்டும் எனக்கு
கவிதை எழுத .... அது தான் காதல்!!

No comments:

Post a Comment