Friday, October 15, 2010

" நான் எழுதிய சில நூறு காதல் கடிதங்கள் "


என்னவளே
எங்கு பார்த்தேன்
உன்னை முதல் முறை !
இல்லை இல்லை
என்கு பார்க்கவில்லை !...

ஓவியமாய்
திரை சேலையில்
காவியமாய் திரையரங்குகளில்
சுவாசிக்கும் முன் நறுமணமாய்
சுவசிதபின் நாடியெங்கும்
ஒரு திடமாய்...

ஒன்றும் விளங்கவில்லை
உன்னைத்தவிர
நீ !
படிபதற்கான கல்லூரியில்
பார்வையில் நடத்திய
பாடங்களை தவிர...

என்
வாழ்க்கையின் மொத அர்த்தமும்
மிச்ச அர்த்தமும்
நீயோ !

என் முதல் நாள் பொழுது
உன்னை பார்த்தபின்
ஆரம்பித்ததோ !...

எனக்கான ஜென்மம்
உனக்காக எழுதி கொடுத்ததோ !...

என் ஒவ்வொரு
கேள்விக்கும் பதில்
நீ மட்டும் தானோ !....

காத்திரு வருகிறேன்
இன்னும் சில கடிதங்களோடு
என்காதல் புரியும் வரை....

" கா-த-ல் "




நான்
தொலைத்ததை
தேடிகொண்டே
தொலைகிறேன் " காதல் "

கண்ட பின்னும்
கொண்ட பின்னும்
குறையவில்லை " காதல் "

பார்வையில் தொலைந்துவிடும்
சில நேரம் " காதல் "
பார்க்காமல் தவித்துவிடும்
சில நேரம் " காதல் "

மணிகணக்கில் பேசிவிட்டு
மழைகாலத்தில்
தொலைந்துபோகும் " காதல் "

எதில் தொலைந்தாலும்
எதில் இழந்தாலும்
இது போல ரணம் இல்லை " காதல்"

வாழ்க்கையின் அர்த்தம்
வாழ்ந்து பார்
வாழ்ந்தபின் எழுதி பார்
அது " காதல் "

பெண்கள்

கொலை ஒன்றும் புதிதல்ல
எங்களுக்கு !
தினம் தினம்
சில ஆயிரம் பூக்களை கொன்றுதான்
குழல் சூடுகிறோம்...

தினம்
சில நூறு
ஆண் பாதசாரிகளை
பார்வையில் கொன்றுதான்
பயணம் செய்கிறோம்...

இப்படிக்கு
அழகாய் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் நாங்கள் " பெண்கள் "