Tuesday, March 29, 2011

இதயத்தின் வலிகள்.......

  காதலில் தோல்வியுற்ற காளை ஒருவனின்  இதயத்தின் வலிகள்....................................... - காதல் தோல்வி கவிதைகள்

 


கனவு கண்டு தினம் தேயிந்து
வாழ்க்கையை தொலைத்ததுண்டு
ஒரு பெண்ணை காதல் கொண்டு....!!

உடலாவிய மாற்றங்களும்
மனதில் ஏற்ப்பட்ட சீற்றங்களும்
சொல்லி விட முடியாது

காதலெனும் போதையில் விழுந்ததுண்டு
வாழ்க்கையெனும் பாதையை மறந்ததுண்டு
காதலிலே தோல்வியுற்று
கல்லறையிலே மேய்ந்ததுண்டு

தேடிவந்த வாழ்க்கையை இழந்ததுண்டு
கண்ணீரை துடைக்க வந்த கரங்களை
உதறி தள்ளியதும் உண்டு

தாடியோடு மறைந்துபோன என் முகம் கண்டு
நான் காதலித்தவளே
எனக்கு பிச்சை போட்டதும் உண்டு
துக்கம் தாங்காமல் நான்
மரக்கிளைகளிலே தொங்கியதும் உண்டு
என் பாரம் தாங்காமல் மரக்கிளைகள்
உடைந்து போனதும் உண்டு

மதுபாட்டிலுடன் தள்ளாடி
மானமிலந்ததும் உண்டு
காவல் நிலையத்தில் அதற்காக
உதை வாங்கியதும் உண்டு

எப்பொழுதும் அவள் பெயரேயே
உச்சரித்ததும் உண்டு
அதனால் நான் பைத்திய காரன் என்று
முத்திரை குத்தப்பட்டதும் உண்டு

உடைந்து போன மதுபாட்டிளால்
அவள் பெயரை என் கரங்களிலே
எழுதியதும் உண்டு
வலியால் துடித்து போனதும் உண்டு

மது பாட்டிலோடு விஷ பாட்டிலும்
வாங்கியதும் உண்டு
இரண்டையுமே கலந்து
குடித்ததும் உண்டு

விஷம் உடலுக்குள்
கலக்கும் போது நான்
அங்கும் இங்கும் ஓடி
துடிதுடித்ததும் உண்டு

தன்னிலை மறந்து மயங்கி கிடந்ததும் உண்டு
நான் கண்விழித்த போது
மரணமும் என் நிலை கண்டு
ஓடி போனதும் உண்டு

தற்கொலை முயற்ச்சி என்று
காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் உண்டு
அதனால் என் குடும்பம்
கேவலப்பட்டதும் உண்டு

எனக்காய் என் பெற்றோர்
கண்ணீர் விட்டதும் உண்டு
என் கவலைகளை மறக்க
நான் முயற்ச்சி செய்ததும் உண்டு

கவிதை எழுத தெரியாமலேயே
கவிதை எழுத வந்ததும் உண்டு
கவிதைகளிலே என்னை பற்றியே
நான் எழுதியதும் உண்டு

என் எழுத்துக்களால் பலர்
கண்ணீர் விட்டதும் உண்டு
புது வாழ்க்கைதேடி நான்
அலைவதும் உண்டு

காதலின் அருமை புரிந்ததுண்டு
காதலின் தவிப்பும் தவித்ததுண்டு
காதலின் வலியை உணர்ந்ததும் உண்டு
காதலால் வாழ்க்கை பாடம் கற்றதும் உண்டு

இப்போது வாழ்கிறேன் கவலைகளை மறந்ததாக
என் அம்மாவிடம் பொய் சத்யம் செய்து நடித்துக்கொண்டு
என் அம்மாவிற்கு அழகான செல்ல குழந்தையாக
மனதிலே அழுது கொண்டு..........   சதீஷ்

                                                                   

No comments:

Post a Comment